சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி காவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவிற்கு பல புகார்கள் வந்ததை தொடர்ந்து, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை நகரின் சுற்றுவட்டார பகுதிகளில், டெலிகிராம் செயலி மூலம் சிறார் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்துள்ளனர். மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் தான் இந்த செயலில் ஈடுபட்டத்தை போலீசார் கண்டறிந்தனர். அவர் 100 சிறார் ஆபாச படங்களை 100 ரூபாய்க்கும், 250 வீடியோக்களை 150 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்தது வெளியாகியுள்ளது.
சைபர் கிரைம் போலீசார் பிரசாந்தின் செயல்பாடுகளை கண்காணித்து, விற்பனை செய்ய பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.