சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவில் சர்வேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சர்வேஷ் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மாத பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பவித்ரா டேபிள் பேனை ஆன் செய்து காற்று நன்றாக வருவதற்கு அதனை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி பவித்ரா தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பவித்ரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.