கன்னடா பாக்ஸ் நகரிலுள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வால்மா ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்கின் ஓவனில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இளம் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இதனால் அந்த கடை மூடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.