கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி அமைந்துள்ளது. அங்குள்ள 30 அடி ஆழ பள்ளத்தில் 22 வயதுடைய முத்துமணி என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் முத்து மணி உறவினர்கள் இரண்டு பேருடன் மது குடிப்பதற்காக சென்றுள்ளனர். இதனால் கல்குவாரி பள்ளத்தில் தவறி விழுந்த முத்து மணி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.