நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு கேள்வி நீ உனக்குள்ளே கேட்டுப் பாறேன்.. என் தாய் மொழியை நான் பேசாம வேற எவன்டா பேசுவான். நான் பேசல… வேற எவன் பேசுவான்…  பேசணும், பெருமிதம்,  திமிரோட பேசணும். என் தாய் மொழியை பேசணும்….  உலகத்தின் முதல் மொழி மகன் நான். உலகிற்கு அறிவியல் நாகரீகம், கலை, இலக்கியம், பண்பாடு, வேளாண்மை, எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்த பேரினத்தின் மகன் நான். என் தாய் மொழியை அழிய விடமாட்டேன்.

தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே.. தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே.. இது நம்முடைய புரட்சி பாவலன் நமக்கு முன்வைத்த முழக்கம். எப்படி இருக்கு பாருங்க ?  கண்ணு முன்னாடி உன் மொழி அழிந்து சிதைந்து விட்டது….  நீ ஒரு தமிங்களம்,  தங்கிலீஷ் பேசுகிற ஒரு இனம் ஆயிட்ட … இப்போ நீ தமிழர்கள் அல்ல,  தமிங்கிலர்கள். இது தமிழ் நாடு அல்ல. தமிங்கல நாடு. இப்போ இந்த கடை தெருவுல எல்லாம் பாரு. இந்த பாரு என கடை வீதிகளில் உள்ள பெயர் பலகையை காட்டி வசித்து காட்டினார்.  ஜி.ஆர்.என் டயாபடிக் சென்டர்,  ராஜேஸ்வரி மருந்து கடை…..  மெடிக்கல்ஸ். இங்க கணேஷ்…  ஸ்ரீ கணேஷ் பைனான்ஸ்….  நகை அடகு கடை. நகை அடகு கடை எதோ தமிழில் எழுதிட்டாரு…

இங்க பைனான்ஸ்… நிதியகம். வங்கி வைப்பகம்.  தமிழ் இருக்கு.. நம்ம தாத்தா மணவை  முஸ்தபா அவர்கள்,  பல லட்சகணக்கான கலைச்சொற்கள், உயிர்ச்சொற்களை வகுத்து, வகுத்து… மருத்துவம்,  அறிவியல், பொறியியல்,  எல்லாத்துக்கும் வச்சிட்டு போயிட்டு இருக்காரு. நல்லா கவனிச்சிக்கணும்…. இன்னும் இருக்கு…. என் தம்பி செம்மல் அவனும் மருத்துவரா தான் இருக்கான். அவன் இருந்தா நம்மகிட்ட வந்துருவோமோன்னு….  இந்த திமுக அரசு  படக்குனு வாங்கி அரசுடைமை ஆக்கி வச்சிக்கிச்சு.

நாம் தமிழர் கட்சி பயன்படுத்திருவானோன்னு… அரசுகிட்ட தான இருக்கு…  அரசு ஒருநாள் என்ட வரும்ல. எல்லாத்துக்கும் சொற்கள் வைத்திருக்கிறார். தமிழகத்தின் தெருவில் தமிழ். ஏன் ? இது தமிழ்நாடு. என் நிலத்திற்குள் நுழையும் போது என் தாய்மொழி. எம்.ஜி.ஆர் ஒரு  சட்டம் போட்டு இருக்கார்….  வணிக நிறுவனங்களில் விளம்பர பலகையிலே மூன்றில் இரண்டு பங்கு தமிழில் இருக்கணும்.  ஒரு விழுக்காடு பொதுமொழில்…. ஆங்கிலத்தில் தொடர்புகாக எழுதி வச்சிக்கலாம் என பேசினார்.