முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.விஜயபாஸ்கர்,குழந்தையின் கை அகற்றிய விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டிருக்கின்ற தவறை கண்டறிய அரசு மருத்துவமணைக்குழு கொடுக்கும் அறிக்கை எப்படி  ஏற்புடையதாக  இருக்கும் ? நிச்சயமா ஏற்புடையதாக இருக்காது. நான்தான் ரொம்ப கிளீனா விளக்கம் கொடுத்தேனே….

அரசு மருத்துவர்கள் மறுத்தாலும் கூட… என்னோட கேள்விக்கு பதில் சொல்லணும். அட்டிகல் அக்குளுசன் அப்படின்னா…? ஏன் அந்த அக்குளுசன் வந்ததுன்னு பதில் சொல்லணும். எப்படி அந்த திராம்பஸ் உருவானது. ஏன் ரெட்னஸ் வந்தது ? ஏன் கங்குரின் வந்தது ? ஏன் அம்புடிஷன் பண்ணாங்க ?  என என்னுடைய  கேள்விக்கு நிச்சயமா அமைச்சர்  பதில் சொல்லணும்.  இதுல பதில் சொல்லி…  சப்பைக்கட்டுக்கட்டி,  முட்டு குடுக்குறத தவிர்த்து….  தொடர்ந்து இதுமாதிரியான சம்பங்கள் நடைபெறுகின்றது.

அரசு மருத்துவமனைகளில் இதுபோல நடைபெறுவது வாடிக்கையாக  இருக்குது. இதை தவிர்ப்பதற்கு அரசு மிகுந்த எச்சரிக்கையோடு, கவனத்தோடு…  இந்த துறையை சீர்படுத்தவேண்டிய  நிலையிலே இன்றைக்கு அரசாங்கம் இருக்கிறது… விசாரணை மட்டும் ஒரு தீர்வாகாது. இப்ப குழந்தைக்கு கை போய்டுச்சி.  அந்த தாய் கண்ணீரோட இருக்கு…  எங்ககிட்ட சொல்லுறாங்க.

சார்..! எதோ நிவாரணதிற்கு நான் நியாயம் கேக்குறேனு சொல்லுறாங்க ..அது தான் வேதனையா இருக்கு… நேற்று வரை என்னை பாத்து சிரித்த குழந்தை,  கை இல்லாம இருக்கு…. நான் நிவாரணத்துக்காக கேட்கலைன்னு சொல்லுறாங்க…. அதனால ,யாரு விசாரணை செய்யுறாங்க என்பதைவிட….  உடனே தவறு நடந்தா தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். இனிமேல் இது போன்ற தவறு நடைபெறாமல், இதற்க்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார்.