மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா நடத்திய ஒரு அதிரடித் தாக்குதல் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஈரானின் ‘IRIS தேனா’ (IRIS Dena) என்ற அதிநவீன போர்க்கப்பலை அமெரிக்கப் படைகள் குறிவைத்துத் தாக்கி முழ்கடித்துள்ளன.

இது தொடர்பாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை தான் இப்போது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. “அமெரிக்கா ஒரு மிகக்கொடூரமான செயலைச் செய்துள்ளது; அந்தப் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் விருந்தினராக (Guest) அங்கு சென்றிருந்தது. அமெரிக்கா இப்போது ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனது வார்த்தையை எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இதற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்தே தீருவார்கள்” என்று ஈரான் கடுமையான தோனியில் மிரட்டல் விடுத்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் நடக்கும் மிக முக்கியமான கடற்படைத் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

2016-ல் அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம், இப்போது இந்தியாவிற்குச் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.