
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் உயிர் மற்றும் உலக் என்று 2 மகன்கள் இருக்கிறார்கள். தற்போது நயன்தாரா “மூக்குத்தி அம்மன் 2” என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு வந்திருந்தார்.
அவர்களை மலையடிவாரத்தில் இருந்து காவல்துறையினர் ரோப் கார் மூலம் மலையில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்வதற்காக அவர்கள் சிறப்பு தரிசன வழியில் சென்றனர். பின்னர் கோவில் ஊழியர்கள் அவர்களுக்கு பிரசாதம் மற்றும் சாமி படங்கள் வழங்கினர். மேலும் நயன்தாராவின் வருகையால் கோவிலில் இருந்த பக்தர்கள் அவருடன் செல்பீ எடுப்பதற்காக சூழ்ந்த நிலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.