
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. ரசிகர்களால் எவர்கிரீன் குயின் என்று அன்போடு அழைக்கப்படும் திரிஷா சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்த நந்தினி கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து திரிஷா நடிப்பில் வெளியான ராங்கி படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் நடிகை திரிஷா லேட்டஸ்ட் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.