‘தக் லைப்’ திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் கமலஹாசன் மற்றும் புகழ்பெற்ற தொகுப்பாளர் கோபிநாத் ஆகியோர் இணைந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி யூடியூபில் வெளியிடப்பட்டதும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில், கோபிநாத், கமல்ஹாசனின் சிறுவயது காலத்துக்கான அனுபவங்களை கேட்டு அறிந்தார். அதற்கேற்ப, கமல் மிகுந்த பொறுமையுடன், தனது குழந்தைப் பருவத்தில் நடித்தது, சந்தித்த சவால்கள், சந்தோஷங்கள் மற்றும் தன்னுடைய நடிப்புக்கு எப்படி பாராட்டுகள் கிடைத்தன என்பதை சுவாரசியமான கதைகளோடு பகிர்ந்தார். அந்த தருணங்கள் ரசிகர்களின் மனதை நெகிழ்ச்சியடையச் செய்தன.

இந்த நிகழ்ச்சியின் மற்றொரு விசேஷமான அம்சம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிசயமான பயன்பாடாகும். கமலின் சிறுவயது புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு, அந்த வயதில் அவர் பேசுவது போல லிப் சிங் செய்த வீடியோவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

“>

அந்த வீடியோவில் சிறுவயது கமல் தான் நேரில் வந்து பேசி வருகிறார் போல் என தோன்றும் வகையில், மிகத் தெளிவான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்கை நுண்ணறிவு மூலம் உருவான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று, ‘கலை’ மற்றும் ‘கணினி’ இணைந்தால் என்னென்ன செய்ய முடியும் என்பதை காண்பித்துள்ளன.