2023-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஐ.எம்.எஃப் என சுருக்கமாக அழைக்கப்படும் சர்வதேச நிதியம் உலக பொருளாதார தற்சமயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான அந்த அறிக்கையின் படி 2023 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 6.1% மற்றும் சர்வதேச பொருளாதார தற்போதைய நிலையிலிருந்து 2.9% குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆசிய கண்டத்தில் 2023 மற்றும் 2024-ல் பொருளாதார வளர்ச்சி முறையில் 5.3 சதவீதம் மற்றும் 5.2 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. உலக பொருளாதாரத்தை பொருத்த வரையில் 2022-ல் கணிக்கப்பட்டுள்ள 3.4 சதவீதத்தில் இருந்து 2023-ல் 2.9% என்று குறைந்து 2024-ல் 3.1% அதிகரிக்கும் என கணித்துள்ளது. இது குறித்து சர்வதேச நிதியத்தின் ஆய்வுத்துறை தலைமை பொருளியல் நிபுணர் மற்றும் இயக்குனர் கூறுகையில் கடந்த அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி நாங்கள் கணித்ததில் பெரிய மாற்றம் இல்லை.

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8% என்ற அளவிலேயே இருக்கும். மார்ச் வரையில் இந்த கணிப்பு அதன் பின்னர் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படும். 2023 ஆம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக குறையும். இதற்கு வெளி வட்டார அழுத்தங்களை பெரும் காரணமாக இருக்கும் என்று அதே நேரத்தில் 2024 மீண்டும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி 6.8 சதவீதமாக அதிகரிக்கும் என்று ஐ.எம்.எப் தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்திருந்தாலும் நாட்டின் பணவீக்கம் செய்யும் என்ற நல்ல செய்தியையும் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதி ஆண்டில் பணவீக்கம் 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் அதன் பின்னர் அடுத்த நிதியாண்டில் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் என்றும் அதுவே 2024-ல் இந்தியாவின் பணவீக்கம் 4% என்றும் கணித்துள்ளது. உலக பணவீக்கம் என்பது 2022 இல் சராசரியாக 8.8 சதவீதமாக உள்ள நிலையில் 2023 ஆம் நிதி ஆண்டில் 4.3% ஆகவும் 2024 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.