ஐசிசி யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் நடைபெற உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை நடைபெறும் கிரிக்கெட் தொடருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்காக பி.சி.சி.ஐ பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.

உலகின் முன்னணி 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடும் தொடரில் கடைசியில் வெற்றி பெற்ற கோப்பையை வெல்லப் போகும் அணி எது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கில் வாகன் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லப்போகும் அணி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது ஒரு விடயத்தை நான் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அணியை யார் இந்த உலகக்கோப்பை தொடரில் வீழ்த்துகிறார்களோ அவர்களே இந்த உலக கோப்பையை கைப்பற்றுவார்கள். ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய மைதானங்களில் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதோடு பந்து வீசும் திறனும் இந்திய அணியில் சிறப்பாக இருக்கிறது. எனவே உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இந்திய அணியை வீழ்த்தும் அணிதான் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என பதிவிட்டுள்ளார்.