
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தான் மக்களை நாடு திரும்பும் படி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் மக்கள் மருத்துவம் மற்றும் சுற்றுலாவிற்கு வந்தவர்கள் என்று தெரிய வந்த நிலையில் அனைவரையும் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 786 பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதில் 55 பேர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதோடு பாகிஸ்தானில் வசித்து வந்த 1465 இந்தியர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி உள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தான் மக்கள் பஞ்சாப் மாநிலம் அடாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு திரும்பி உள்ளனர்.