ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஆனது கடந்த மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த மாதம் ஒரு நாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டது என்று தமிழக அரசு சார்பில் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக பல புதிய விண்ணப்பங்கள் பெறக்கூடிய பணியும் நடைபெற்று வருகின்றது. தகுதியுடைய பயனாளர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தால்? அவர்கள்  மேல்முறையீடு செய்யக்கூடிய பணி,  அவற்றை பரிசீலிக்க கூடிய பணியும் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இந்த அக்டோபர் மாதத்திற்கு 5041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும், புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கும் இந்த மாதம் ஆயிரம் ரூபாய் வரவு  வைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு சார்பில் செய்தி குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மாதம் அதிகமான வசதி படைத்தவர்கள்,  பொய்யான தகவல்கள் கொடுத்து உள்ளே வந்தவர்கள்,  தகுதியானவர்,  பயனாளர்கள் பட்டியில் சேர்ந்து இறந்தவர்கள் என 8833 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டு மகளிர் மிகவும் பயனுள்ள வகையிலே மிகச் சிறந்த திட்டமாக அமைந்திருக்கிறது. அனைத்து தரப்பினருடைய வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று செய்தி குறிப்பிலே குறிப்பிடப்பட்டுள்ளது.