மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் வுமன்ஸ் மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் 2025 போட்டியில், சோலாப்பூர் ஸ்மாஷர்ஸ் அணியின் வீராங்கனை ஷராயு குல்கர்ணி சிறப்பாக விளங்கினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராய்கட் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அவர் எடுத்த ஒரு விக்கெட் கொண்டாட்டமாக ரிஷப் பண்ட் போல பிளிப் அடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

இந்த சம்பவம், ராயல்ஸ் அணியின் கீப்பர் பேட்டர் பவிகா அஹிரேவை ஷராயு குல்கர்ணி வெளியேற்றிய பிறகு நடந்தது. 14 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த பவிகா, ஆஃப்-சைடு பக்கம் எளிதாக பிடிக்கப்பட்ட கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். உடனடியாக ஷராயு, இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்தது போல் பிளிப் அடித்து கொண்டாடினார். இது 2025 ஐபிஎல் போட்டியில் எகானா ஸ்டேடியத்தில் ரிஷப் பண்ட் சதம் அடித்தபோது செய்த பிளிப் கொண்டாட்டத்தை நினைவூட்டியது.

 

இந்த போட்டியில் ஷராயு குல்கர்ணி 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவருடைய சரியான பந்து வீச்சும், உற்சாகமான ஆட்டத்தினால், சோலாப்பூர் அணிக்கு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கிடைத்தது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “ரிஷப் பண்ட் ஸ்டைல் லைவ்!” என சிலர் புகழ்ந்துள்ளனர். இதுபோன்ற உற்சாக தருணங்கள் மகளிர் லீக் போட்டிகளுக்கும் பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்கின்றன என்ற கருத்தும் எழுந்துள்ளது.