
சிங்கப்பூரில் எரக்கோடன் அபின்ராஜ்(26) என்ற இந்தியர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய மகள் வேறொரு அறையில் இருந்திருக்கிறார். இந்நிலையில் அபின்ராஜ் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். யாரோ தொடுவது போல் உணர்ந்த அப்பெண் எழுந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து டார்ச் லைட் உதவியுடன் அபின்ராஜ் செல்போனை அந்தப் பெண் பறித்துள்ளார். அதன் பின் அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது கணவர் எழுந்து அபின்ராஜை அறையை விட்டு வெளியே செல்லும்படி கூறியிருக்கிறார். இதில் பயந்து போன அவர் அந்த அறையிலேயே சிறுநீர் கழித்து உள்ளார். அதோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சியுள்ளார். இருப்பினும் அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி காவல்துறையினர் விரைந்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அத்துமீறி உள்ளே வந்த விஷயங்களை அவர் ஒப்புக்கொண்டபோதும் பெண்ணை தொடவில்லை என்றும் மொபைல் போன் அந்த பெண் மீது விழுந்து விட்டது. அதனை தான் அவர் எடுத்தார் என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபின்ராஜிக்கு 7 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் மற்றும் சவுக்கடியும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.