காசா நகரில் வடக்கு பகுதியில் இருந்து 11 லட்சம் மக்கள் 6 மணி நேரத்தில் வெளியேறுவதற்காக தற்போது போர் நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறிப்பாக காசா நகரத்திலிருந்து தெற்கு பகுதியை நோக்கி காஸ் யூனிஸ் நகரம் வழியே தான் எகிப்து நாட்டை சென்றடைய முடியும். காசா பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மக்கள் நகர்ந்து வருவது. வடக்கு காசாவில் தற்போது 11 லட்சம் மக்கள் இருக்கும் நிலையில், அவர்களை 24 மணி நேரத்தில் வெளியேற்றுவது சாத்தியமே இல்லை என ஐநா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் தற்போது இத்தகைய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்திருக்கிறார்கள். குறிப்பாக பீரங்கிகள் மூலமும்,  நவீன ஆயுதங்கள் மூலமும் தரை வழியே ஊடுருவும் நடவடிக்கைகளில் தற்போது இஸ்ரேல் ராணுவம் எடுத்துவரும் நிலையில்,  குறிப்பாக காசநகரத்தின்  வடக்கு பகுதியில் இருந்து வருகின்ற இரண்டு வழித்தடங்கள் முக்கியமான மெயின் நெடுஞ்சாலைகளில் தாக்குதல் ஏதும் நடத்தப் போவதில்லை.  அந்தப் பகுதிகளில் இஸ்ரேல் உடைய நேரப்படி காலை 10 மணியிலிருந்து மாலை நான்கு மணி வரைக்கும் ஆறு மணி நேரம் இடைவெளியில் மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் அந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 லட்சம் மக்கள் வெளியேற வேண்டும். இது சாத்தியம் இருக்குமா ? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இருந்தாலும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ,ஐநா,  ஐரோப்பிய யூனியன்,  அமெரிக்கா போன்றவை கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது இஸ்ரேல் ராணுவம் தற்போது ஆறு மணி நேரம் மட்டும் இந்த தாக்குதலை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆறு மணி நேரத்திற்குள் மக்களை வெளியேற்றுவது மிகப்பெரிய சவால் மிகுந்த பணியாக இருக்கும் என்று ஐநா தெரிவித்துள்ளது.