ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கி 7 நாட்கள் ஆகியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரை வேரோடும்,  வேரடி மண்ணோடும் வீழ்த்தி விட வேண்டும் என்கின்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தரை, கப்பல், விமானமாகிய மூன்று படைகள் மூலமும் 360 டிகிரி தாக்குதல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கியுள்ளனர். இந்நிலையில்தான் இஸ்ரேல் ராணுவம் ஒரு முக்கியமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தன்னுடைய ராணுவ பலத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இஸ்ரேல் ராணுவத்தில் எப்போதுமே 1 லட்சத்து 80 ஆயிரம் ராணுவ வீரர்கள் முழு நேரமாக பணியில் இருப்பார்கள். 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பகுதி நேரமாக பணியாற்றியவர்களாக இருப்பார்கள்.  இந்நிலையில் தற்போது 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் இஸ்ரேல் ராணுவத்தில் போரில் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

புதிதாக 1 லட்சத்து 20 ஆயிரம் யூத மக்கள் தாங்கள் போரில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக இஸ்ரேல் ராணுவத்தில் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நவீன ஆயுதங்களை அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வாங்குவதற்கான முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கான பச்சை கொடியை ஐரோப்பிய யூனியன், நோட்டா நாடுகள்  கொடுத்துள்ள நிலையில்,  ராணுவ வீரர்களுடைய எண்ணிக்கையும் அதிகப்படுத்தினால்,

காசா நகரத்தில் போர் மேலும் நீட்டிக்க படலாம் என தெரிவிக்கப்படுகிறது. எட்டாவது நாள் கிட்ட போர் நடந்து கொண்டிருக்கிற நிலையில் இன்னும் பல நாட்கள் போரும் நடைபெறும் என்கின்ற காரணத்தால் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது இஸ்ரேல். மேலும் காசா பகுதியில் மொத்தம் 22 லட்சம் மக்கள் இருக்கின்ற நிலையில், அவர்களில் வடக்கு பகுதியில் மட்டும் 11 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களை வெளியேற்றுவதற்காக தற்போது ஆறு மணி நேரம் தற்காலிகமாக குறிப்பிட்ட வழிதடத்தில் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.