பாரதிய ஜனதா கட்சியின்  மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் தான் அண்ணாமலை தலைமையில் இன்று கமலாலயத்தில் காலை சரியாக 10 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. அண்ணாமலை இன்னும் டெல்லியில் இருந்து திருபாத நிலையில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று காலை மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் மிக முக்கிய உயர் அதிகாரம் கொண்ட பெரும் கோட்ட  பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற  இருக்கிறது.

இந்த கூட்டத்தை மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், வினோத் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  இந்த கூட்டத்தை பொருத்தமட்டில் திடீரென  அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தான் இந்த கூட்டத்திற்கு பாஜக சார்பில் திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கக்கூடிய நிலையில்,  மாவட்ட ரீதியாக கட்சியை எப்படி பலப்படுத்துவது ? பூத்து கமிட்டி எப்படி அமைக்கப்பட்டு வருகிறது ?  கிட்டத்தட்ட 60 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக பாஜக தெரிவித்து இருந்தாலும்,  அதனுடைய செயல்பாடுகள் இன்னும் மாநில தலைமைக்கு முழுமையாக திருப்தி கொடுக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் தான் இன்றைய தினம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி ரீதியாக….  இன்னும் நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராவது ? என்னென்ன வியூகங்களை வகுப்பது ? அங்கு இருக்கக்கூடிய கள நிலவரங்கள் என்னவாக இருக்கிறது என்று பெருங்கோட்ட பொறுப்பாளர்களுடன் கேசவ  விநாயகம் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த ஆலோசனை கூட்ட முடிவுக்கு பிறகு அடுத்த கட்ட கூட்டம் எப்போது நடைபெறும் ? ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் – மாவட்ட தலைவர்கள் கொண்ட உயிர் மட்ட குழு ஆலோசனை கூட்டம் எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அண்ணாமலையும் டெல்லி பயணத்தை இன்று அல்லது நாளை முடித்துக் கொண்டு மீண்டும் தமிழகம் இருக்கும் நிலையில் 6ஆம் தேதியில் இன்று நடைபெற பெருங்கோட்ட பொறுப்பாளர் கூட்டம் என்பது அரசியல் ரீதியாக பாஜகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.