
திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதான நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவர் சிறையில் இருக்கிறார். இவர் ஜாமின் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு கொடுத்துள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில் உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தது. இந்நிலையில் இன்று காலை 10:30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியாக உள்ளது. மேலும் இதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.