பிரதமர் மோடி தலைமையில் புதிய திட்ட குழுவிற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் நிலையில் மாநிலத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து மாநில முதல்வர்கள் மத்திய அரசுக்கு எடுத்துரைப்பார்கள்.

தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறி  கடந்த வருடம் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் மே 24ஆம் தேதி டெல்லியில் நடைபெறஉள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் வருகிற 24-ஆம் தேதி டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் நீங்கள் கலந்து கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் சிரித்தபடி ஓகே என்று பதிலளித்தார்.