இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் கிர் தேசியப் பூங்காவில் வனவிலங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அவர் சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக குஜராத் வந்துள்ளார்.

இந்த நிலையில் தனித்தன்மை வாய்ந்த சிங்களின் சரணாலயமாக விளங்கும் தேசிய பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அவர் தன் கைப்பட வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டது வைரலாகி வருகிறது. தேசிய விலங்கு பூங்காவை முழுவதுமாக பார்வையிட்ட பின் பிரதமர் நரேந்திர மோடி அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற அப்பகுதியின் புகழ்பெற்ற தலமான சோம்நாத் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.