ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைகிறது. நேற்று காலை 6 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் திகனாரை கிராமத்திற்குள் நுழைந்தது.

இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று திரண்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. எனவே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.