தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வருபவர் சரத்குமார். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த சரத்குமார் தற்போது படங்களின் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி பிரபல நடிகை ராதிகா. இவர் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரை சீரியல்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டியில் நடிகை ராதிகாவுக்கு ஏன் இன்னும் தேசிய விருது வழங்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது நடிகை ராதிகா 45 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். சிறந்த நடிகை என்றால் அதில் ராதிகாவும் ஒருவர் தான். ஆனால் அவருக்கு இதுவரை தேசிய விருது வழங்கப்படவில்லை. அது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னுடைய மகள் வரலட்சுமியும் சினிமாவை பற்றி நன்கு படித்துக் கொண்ட பிறகு தான் ஹீரோயின் ஆகி இருக்கிறார் என்று கூறினார்.