தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என இளைஞர்கள் கொண்டாடும் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் அண்மையில் வெந்து தணிந்தது காடு படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் கௌதம் மேனன் தற்போது படங்களில் நடித்தும் வருகிறார். இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் ஏற்பட்ட நஷ்டத்தால் பண இழப்பை சரி செய்வதற்காக தான் நடித்துக் கொண்டிருக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் வந்தது.

இந்நிலையில் தன்னை பற்றி வந்த விமர்சனங்களுக்கு இயக்குனர் கௌதம் மேனன் ஒரு பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் நான் காசு இல்லாததால் தான் நடிக்கிறேன் என பலர் பேசுகிறார்கள். அது உண்மை இல்லை. எனக்கு நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் என்னுடைய இயக்கத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் யாராவது என்னை நடிக்க வேண்டும் என அணுகினால் உடனே ஒப்புக்கொள்வேன். விடுதலை படத்திற்காக வெற்றிமாறன் என்னை அழைத்த போது என்னுடைய கால்ஷீட்டில் நேரம் ஒதுக்கி சென்றேன். அவருடைய இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன். முதலில் 2 அல்லது 3 நாட்கள் தான் சூட்டிங் இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் 7 நாட்கள் வரை சூட்டிங் சென்றேன் என்று கூறியுள்ளார்.