தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சங்கவி. இவர் அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சங்கவி கடந்த 1993-ம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் அஜித்தும் ஹீரோவாக  அறிமுகமானார். கடந்த 1-ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு 30 வருடங்களுக்கு பிறகு அமராவதி படம் டிஜிட்டலில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இது குறித்து நடிகை சங்கவி பேசியுள்ளார். அவர் அமராவதி படத்தில் நடித்த போது எனக்கு 14 வயது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

நானும் அஜித்தும் பள்ளி படிக்கும் மாணவ மாணவிகள் போன்று தான் இருப்போம். எங்களை நடிக்க வைப்பதற்கு இயக்குனர் செல்வா மிகவும் சிரமப்பட்டார். ஆனால் பிற்காலத்தில் நானும் அஜித்தும்  முன்னணி நடிகர் நடிகைகளாக உயர்ந்தோம். ஒரு படம் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியாவது என்பது ஆச்சரியமான விஷயம். அது என் படத்திற்கு நடந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அமராவதி படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை சங்கவி திருமணத்திற்கு பிறகு தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.