1990 ஆம் ஆண்டு சர்வதேச குடிமை தற்காப்பு அமைப்பு அல்லது ICDO மூலம் உலக சிவில் பாதுகாப்பு தினம் கொண்டுவரப்பட்டது. சிவில் பாதுகாப்பு தினம் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ICDO இன் அரசியலமைப்பு 17ஆம் தேதி அக்டோபர் மாதம் 1966 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதியில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த அரசியலமைப்பு சட்டம் ஐக்கிய நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்த நிலையை கூறுகின்றது. சர்வதேச சிவில் பாதுகாப்பு அமைப்பின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியலமைப்பு தொடங்கப்பட்டு ஒரு ஆண்டு வெற்றிகரமாக மற்றும் நிறைவாக செயல்பட்டதை நினைவு கூறும் விதமாக மார்ச் 1ஆம் தேதி உலக சிவில் பாதுகாப்பு தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ஆம் தேதி சர்வதேச சிவில் பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காக உழைக்கும் அனைத்து மக்களை கௌரவிப்பதற்காகவும் அவர்களின் தியாகங்களுக்கு மதிப்பளிப்பதற்கும் இந்த நாளை நாம் ஒவ்வொரு வருடமும் கடைபிடித்து வருகிறோம்.