தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா காஷ்டடி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விவாகரத்து செய்தாலும் நானும் நாக சைதன்யாவும் நட்பாக பழகி வருகிறோம் என்று சமந்தா கூறினார்.
இதற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு நாகசைதன்யா பிரிவோம் என்று முடிவு செய்த பிறகு நட்பு எதற்காக.? இது என்னை மிகவும் எரிச்சல் அடையச் செய்கிறது. எனக்கு அப்படிப்பட்ட நட்பு தேவையே இல்லை என கூறியுள்ளார். மேலும் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.