ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5ஆவது தொடர் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 தொடர் போட்டிகளில் 2-1 என்ற விகிதக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் தொடர் இன்று நடைபெறும் நிலையில் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா இடம்பெறவில்லை.

இதுகுறித்து புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பும்ரா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “எங்களது அணியின் கேப்டன் அவரது தலைமை பண்பை காட்டியுள்ளார். இந்த போட்டியில் இருந்து ஓய்வெடுக்க விருப்பப்பட்டுள்ளார்” என பதில் அளித்துள்ளார்.