சீனாவின் குவாங்க்டோங் மாகாணத்தில் நடந்த இந்த காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோவாக மாறியுள்ளது. தாய்பூன் மாட்மோ என்ற புயல் தீவிரமாக வீசிக் கொண்டிருந்த நேரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், புயலின் ஆபத்தையும் உல்லாசத்தையும் புரியாமல், தனது வீட்டின் டெரஸ் கதவைத் திறந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by The Weather Channel (@weatherchannel)

அடுத்த நொடியே அவர் கதவுடன் கூடியே காற்றில் பறக்க முயன்ற அதிர்ச்சியான சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புயல் சூறையாடும் வேகத்தில் கதவைத் திறந்த நபர், கதவை உறுதியாகப் பிடித்திருந்ததால் தான், கட்டிடத்திலிருந்து கீழே விழவில்லை .

காற்றின் அழுத்தம் காரணமாக கதவுடன் இழுக்கப்பட்டாலும், அவர் கதவின் கைப்பிடியை பிடித்தவாறே போராடி, பல நொடிகள் கழித்து கதவை மூடி உள்ளே வந்தார். இது போன்ற மாரடைப்பு தரும் நொடிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை @weatherchannel தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுடன், “புயலின் போர் அறியாமல் கதவைத் திறந்த நபருக்கு இது ஒரு மிகப் பெரிய பாடமாக மாறியது” என்ற வாசகத்தையும் இணைத்துள்ளது.

தற்போது இந்த புயல் தொடர்பாக 151,000 பேர் பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டுள்ளனர் என்றும், சாலை மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாட்மோ, இந்த ஆண்டின் 21வது புயலாக, Category 2 வகை புயலின் அளவுக்கு 104 mph வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க கடற்படையின் புயல் ஆய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.