தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், விருகம்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் எம்.எல்.ஏ சபரிநாதன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

முதலமைச்சரின் ஓட்டுநராகப் பணிபுரிபவரின் மகனான சபரிநாதன், இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். அப்போது, ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பாக தனது தலைவரான முதலமைச்சர் விஜய்யைப் பார்த்து, அவரிடம் அனுமதி பெற்ற பிறகே கையெழுத்திட்டார்.

ஒரு சாதாரண ஓட்டுநரின் மகன் இன்று மக்கள் பிரதிநிதியாக உயர்ந்து நிற்பதும், அந்த வெற்றியிலும் தனது தலைவருக்கு அவர் காட்டிய மரியாதையும் அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

எளிய பின்னணியில் இருந்து வந்த ஒரு இளைஞன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த இந்த ‘Wholesome’ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களைக் குவித்து வருகின்றன.