தெலுங்கு திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான லட்சுமி மஞ்சு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். நடிகர் மோகன் பாபுவின் ஒரே மகள் ஆவார். தமிழ் மொழியில் இஞ்சி இடுப்பழகி, கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். சினிமா துறை மட்டுமல்லாத சமூக சேவையிலும் லட்சுமி மஞ்சு செயல்பட்டு வருகிறார். தெலுங்கானா மாவட்டத்தில் ஏற்கனவே 30 பள்ளிகளை தத்தெடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜோகுலம்பா கத்துவால் என்ற பகுதியில் உள்ள 20 அரசு பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். இதுகுறித்து லட்சுமி மஞ்சள் கூறியதாவது, ஏற்கனவே 20 பள்ளிகள் தற்போது 30 பள்ளிகள் மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்துள்ளேன். தனியார் பள்ளிகளைப் போன்று அரசு பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என்னுடைய ஒரே நோக்கம்.

ஏற்கனவே 30 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்ற வசதிகளை செய்து கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்று தற்போது 20 பள்ளி மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க உள்ளோம். நன்றாக படித்து நல்ல நிலையில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் நம் நாட்டையே மாற்றி அமைக்கலாம். இவ்வாறு லட்சுமி மஞ்சு தெரிவித்தார்.