சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகின்றார். படப்பிடிப்பு 70% முடிவடைந்து உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் ரஜினி ஜெயிலராகவும் ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாகவும் வசந்த் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும் தமன்னாவும் சுனிலும் சினிமா நடிகர்களாகவும் நடித்திருக்கின்றார்கள். இது மட்டுமல்லாமல் ரஜினியின் காட்சிகள் விரைவில் நிறைவு பெற இருப்பதாகவும் விரைவில் இது குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.