பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்னு கூறியது குறித்து செய்தியாளர் கேட்டபோது பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

அதை இந்தியா கூட்டணி தாங்க கொண்டு வந்துச்சு. சரி வெளிப்படையா பேசுவோம். நீட் என்ற ஒன்றை கொண்டு வந்தது யாரு ? இந்தியா தான் கொண்டு வந்தது. நம்ம இப்படி பேசுவோம்…  அருமை சகோதரர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள்,  சென்னை வானூர்தி நிலையத்தில் கொடுத்த பேட்டி இருக்கு… வளையொலியில நீங்க பாக்கலாம்….  நீட் தேர்வு அவசியம் என்று…. அவருக்கு எதுக்கு சீட்டு கொடுத்தீங்க காரைக்குடியில் நிக்க ?நீங்க நீட்டை எதிர்க்கிறீங்க… வரவேற்கிறேன். ஏன் நீங்க கொடுத்தீங்க ?

நீட் தேர்வு வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு வென்ற பெருமைகள் யாரு ? அம்மா நளினி சிதம்பரம். அந்த கட்சி எதுக்கு கூட வச்சிருக்கீங்க ?  எத்தனை நாளைக்கு இங்க நாடகம் போடுவீங்க ? உங்க அப்பா பெரிய நாடக ஆசிரியர், திரைக்கதை வசனகர்த்தா. அதுக்காக நாடகமே எழுதிட்டு இருப்பீங்களா ? கச்சத்தீவு கொடுத்துட்டு அதுக்கு எங்களுக்கும் சம்பந்தமே கிடையாது… அதிமுக தான் பண்ணுச்சு…  என்னப்பா இது? என்னத்தையாவது வாய்க்கு வந்தத பேசிட்டு போறதா என்ன ?

கச்சத்தீவை கொடுக்கும் போது நாட்டின் முதலமைச்சர் யார் ? எத்தனை லட்சம் மக்களை திரட்டி போராடுனீங்க ? என் நிலப்பரப்பு எடுத்து கொடுக்காத…. என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் போயிரும்னு… சொல்லுங்க… எங்க தாத்தா மூக்கையா தேவர் பேசுறான்… அங்க பாராளுமன்றத்தில் சண்டை போட்டான்….  நீங்க யாரு கச்சதீவுக்காக பேசுனீங்க ?  எங்க போட்டீங்க சொல்லுங்க? சும்மா ஏதாவது ஒன்னு பேசுறது… கச்சதீவை கொடுத்தது நாங்க கிடையாது, எங்களுக்கு – இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கச்சத்தீவை நாங்கள் மீட்போம் என பேசுறது என சீமான்  தெரிவித்தார்.