தமிழகத்தில் அதிக அளவிலான சேதமடைந்த பேருந்துகள் செயல்பட்டு வருவதாகவும் அதனால் விபத்துக்கள் நிகழ்வதாகவும் மக்கள் தொடர்ந்து புகார்களை அரசிடம் முன்வைத்து வருகின்றன. இதனால் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் சேதமடைந்துள்ள பழைய பேருந்துகள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டு 4200 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

10 வருடத்திற்குள்ளான பேருந்துகள் சீரமைக்கப்பட்டு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் இயக்கப்படும் 1500 பழைய பேருந்துகள் விரைவில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக பழைய பேருந்துகளை கைவிடுவதற்கு முன்பு புதிய பேருந்துகளை வாங்க மத்திய அரசிடம் அவகாசம் கோரி உள்ளதாகவும் விரைவில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.