
மராட்டியத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி முதல் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அவர்கள் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதிக இடங்களில் பாஜக கட்சி வெற்றி பெற்றது. இதனால் முதல் மந்திரி பதவியை ஏற்க விரும்பியுள்ளது. அதே நேரத்தில் முதல் மந்திரியாக இருக்கும் ஷிண்டேயின் முகத்தை முன்வைத்து இந்த தேர்தல் நடைபெற்றதால், அவரே பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் பாஜக இதனை மறுத்துள்ளது. அதன் பிறகு நடத்திய பேச்சு வார்த்தையில் முதல் மந்திரி பதவியை பாஜகவுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து முதல் மந்திரி பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதையும் தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க விரும்புகின்றோம் என்று கூறினார். அதிகார பகிர்வு விஷயத்தில் பா.ஜனதா மீது கொண்ட அதிருப்தியில் ஷிண்டே தனது சொந்த கிராமத்துக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா வருகிற 5ம் தேதி நடைபெறும் என்று நேற்று முன்தினம் பா.ஜனதா அறிவித்துள்ளது.