ஒவ்வொரு வருடமும் இந்திய விமானப்படை தினம் அக்டோபர் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது .அக்டோபர் எட்டாம் தேதி 1932 இல் இந்திய விமானப்படை ஆனது தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பர்மாவில் இருந்து ஜப்பானிய படைகள் முன்னேறியதை தடுக்கும் விதமாக  இந்திய  விமானப்படை மிக சிறப்பாக செயலாற்றியது. இதனால் ராயல் என்ற பெயரை இந்தி விமானப்படைக்கு வழங்கி ஆங்கில அரசு கவுரவித்தது. அதன்பிறகு ராயல் இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் பெற்றது. 1947 ஆம் வருடம் இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு ஆங்கிலேய அரசின் கீழ் செயல்பட்டு வந்த விமானப்படை இந்திய அரசின் கீழ் செயல்பட தொடங்கியது.

அப்போதும் ராயல் இந்திய விமானப்படை என்றுதான் இருந்தது. 1950 வருடம் இந்தியாவுக்கு என்று தனி அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நாடாக மாறிய பிறகு ராயல் என்ற வார்த்தையானது நீக்கப்பட்டு இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதுலிருந்து தற்போது வரை இந்திய விமானப்படை பாகிஸ்தானுடன் நான்கு போர்களிலும் சீனாவுடன் ஒரு போரிலும் ஈடுபட்டது. ஆபரேஷன் விஜய், ஆபரேஷன்  மேக் தூத், ஆபரேஷன் காக்டஸ் போன்ற முக்கிய வான்வழி ஆபரேஷன்களை இந்திய விமானப்படை நிகழ்த்தியுள்ளது. அது மட்டும் இன்றி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளிலும் பங்கெடுத்துள்ளது. மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் இந்திய விமானப்படை சிறப்பாக செயலாற்றி உள்ளது.