உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக மெட்டா நிறுவனம் அடிக்கடி whatsappபில் புதுப்புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஸ்டேட்டஸுக்கு லைக் செய்வது போன்ற இன்ஸ்டாகிராமில் இருக்கும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ‌ இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது whatsappபில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் முதலில் Contact பகுதிக்கு சென்று போன் நம்பரை சேவ் செய்ய வேண்டும்.

அதன் பிறகு தான் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும். ஆனால் தற்போது இதற்கு பதில் whatsapp செயலியிலேயே போன் நம்பரை சேமித்து மெசேஜ் அனுப்பும் வசதியை மெட்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. பொதுவாக செல்போன் தொலைந்து விட்டால் அதில் உள்ள நம்பர்களும் தொலைந்து விடும். ஆனால் whatsappபில் நேரடியாக போன் நம்பரை சேமிப்பதன் மூலம் இனி அந்த பிரச்சனை இருக்காது. மேலும் இந்த வசதியை விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.