இந்திய ரயில்வேயில் ஒரு மர்மமான சம்பவம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ‘பர்மூடா முக்கோணம்’ (Bermuda Triangle) போல, ஒரு ரயில் தடம் தெரியாமல் தசாப்தங்களாக மறைந்திருந்த ரகசியம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
1976ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி, அகமத்நகரில் இருந்து தின்சுகியாவுக்கு (Tinsukia) சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயில், கடும் மழையால் காட்டின் நடுவே நிறுத்தப்பட்டது.
லோகோ பைலட் இன்ஜினை மட்டும் எடுத்துக் கொண்டு நிலையத்திற்குச் சென்ற நிலையில், வெள்ளம் மற்றும் ரயில் தடம் சேதத்தால், அந்த ரயில் 43 வருடங்களாக ரயில்வே பதிவுகளில் இருந்து மாயமாகிப் போனது.
நீண்ட காலமாக மறைந்திருந்த இந்த ரகசியம், 2019 டிசம்பரில் வெளிவந்தது. ஆசியா-ஆப்பிரிக்கா பகுதியின் காடுகளை நாசா (NASA) தனது செயற்கைக்கோள் கேமராக்கள் மூலம் கண்காணித்தபோது, தின்சுகியா காட்டில் ஒரு சந்தேகத்திற்குரிய வடிவம் இருப்பதை அவதானித்தது.
அது இந்தியாவின் இரகசிய ஏவுகணையாக (Missiles) இருக்கலாம் என்று அமெரிக்க நிபுணர்கள் சந்தேகித்தனர். உடனடியாக, ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலக உளவு நிறுவனங்களும் இதில் கவனம் செலுத்த, இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகளும் விழித்துக் கொண்டன.
இறுதியில், அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, அது 1976-ல் காணாமல் போன சரக்கு ரயில், முற்றிலும் துருப்பிடித்த நிலையில், அடர்ந்த புதர்களுக்குள் புதைந்து கிடந்தது தெரிய வந்தது.
எனினும், 2020ஆம் ஆண்டில் ரயில்வே நிர்வாகம், அப்படி ஒரு ரயில் காணாமல் போனதற்கோ அல்லது கண்டுபிடிக்கப்பட்டதற்கோ உறுதியான தகவல்கள் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
