செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், புத்தக வாசிப்பு ரொம்ப அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நாம வந்து,  நம்மள மேம்படுத்துகிறதுக்கும்… பக்குவப்படுத்துகிறதுக்கும்…. அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து போவதற்கும் வாசிப்பு வந்து ரொம்ப அவசியமானது. குறிப்பா, இந்த காலகட்டத்தில் எல்லாருமே வந்து நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். நிறைய வாசிக்கணும்… நிறைய படிக்கணும்…

சினிமாவுல இருக்குறவங்க இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கு. ஏன்னா இன்றைய சினிமா ஒரு சோசியல் மூவ்மெண்டாக இருக்கிற சினிமாவா இருக்கு. குறிப்பா தமிழ்நாட்டில் அப்படி ஒரு சூழ்நிலை இருக்கு. கட்டாயம் நாம எல்லாரும் படிக்கணும்.  படிப்பதின் வாயிலாகத்தான் வந்து நாம,  நம்மளுடைய பழக்கங்களில் இருந்து அல்லது  நம்மை பழக்கி வைக்கப்பட்டிருக்கிற விஷயங்களில் இருந்து நம்மை விடுவிக்க முடியும்.

Equality is the birthright ( சமத்துவம் என்பது பிறப்புரிமை) அதுல   கேள்விகள்  இல்ல.இருக்கின்ற எல்லாருக்கும் எல்லாமும் சமமா கிடைக்கணுங்குறது அடிப்படை . அது பிறப்புரிமை. அதை  மறுக்கின்ற எதுவாக இருந்தாலும்… எந்த ரூபத்தில் இருந்தாலும்…  அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும், சுதந்திர மனிதர்களாக… விடுதலை விரும்பும் மனிதர்களாக… நம் எல்லாருடைய கடமையான நினைக்கிறேன்.

அதை பற்றி பேசி இருக்கின்ற திரு. உதயநிதி அவர்களோட இந்த உணர்வுகளில்  எல்லாரும் கூட இருக்கணும் அப்படின்றது என்னுடைய விருப்பம். I Stand By Him. இதை இந்த இடத்தில் நான் சொல்வதற்கான காரணம் என்னன்னா…? நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்டிருக்கின்ற எல்லாவற்றிலிருந்தும் விடுதலை. தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்ற விஷயங்களில் ”விடுதலை” என்பது  நமக்கான வாசிப்பிலிருந்து…  அறிவியல் பூர்வமான வாசிப்பிலிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதால…  நான் இந்த இடத்தில் பேசுறேன்.