
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான ஆச்சரியமூட்டும் செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் விஞ்ஞானிகள் தற்போது கொசுவுக்கு உள்ள தன்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது ஏடிஸ் எகிப்டி என்ற கொசு டெங்கு நோயை ஏற்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.
அந்த கொசு வாசனையை முகரும் திறன் கொண்டதால் மனிதர்களை கடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதன்பின் ஏடிஸ் எகிப்டி கொசுவிடமிருந்து முகரும் திறனை அளிக்கும் மரபணுவை விஞ்ஞானிகள் நீக்கி ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் கொசு முகரும் திறன் நீக்கப்பட்ட பின்பும் மனிதனை கடித்தது.
அது எப்படியென்றால் உடலின் வெப்பத்தை உணரும் திறனை வைத்து கொசுக்கள் மனிதனை கடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த வகையில் நுகர்வுத் திறன் நீக்கப்பட்ட கொசுவிற்கு வெப்பத்தை உணரும் திறன் அதிகரிக்கிறது. அதோடு டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும்போது செயல்படும் நோய் எதிர்ப்பு செல்களை ஆன்டிபாடிகள் உருவாக்குகிறது.
இந்த ஆண்டிபாடிகள் சில நேரங்களில் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும். ஆனால் சில நேரங்களில் நோயை தீவிர படுத்தவும் செய்யும். இந்த வகையான டி செல்களிலிருந்து பாதுகாப்பை அளிக்கும் செல்களை சரியாக கண்டறிந்தால் டெங்குவிற்கான சிறந்த தடுப்பூசியை கண்டுபிடிக்க உதவும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.