
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் மௌனி கன்சல்டிங் சர்வீஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வேலை வாய்ப்புக்காக விளம்பரம் செய்துள்ளது. அதில் டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது. அதோடு இந்தி மொழி நன்றாக பேச தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தென் இந்தியர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்றும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன, சிலர் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக இந்த பணிக்கு ஹிந்தி மிகவும் அவசியம் என்பதாலும், தென்னிந்தியர்களால் அவ்வளவு நுட்பமாக இந்தி பேச முடியாது என்றும் கூறுகின்றனர். ஆனால் இன்னும் சிலர் தென்னிந்தியர்களில் நன்றாக இந்தி தெரிந்தவர்களும் இருக்கின்றனர் என்றும், சொந்த நாட்டுக்குள்ளேயே பாகுபாடு காட்டுவது நியாயமா என்றும் கேள்வி அளிக்க உள்ளனர். அதோடு இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.