தேசிய தேர்வு முகமை பொங்கல் பண்டிகையின்போது தேர்வுகள் நடக்கும் என்று அறிவித்துள்ளது. அதாவது உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேசிய தகுதி தேர்வு எனும் UGC-NET தேர்வுகள் ஜனவரி 15 மற்றும் ஜனவரி 16 ஆகிய தேதிகளில் சுழற்சி முறைப்படி நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே CA தேர்வு பொங்கல் பண்டிகையின் போது நடைபெற இருந்த நிலையில் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அந்த தேர்வினை மாற்றி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதால் பின்னர் தேர்வு தேதி மாற்றப்பட்டது. மேலும் இந்த நிலையில் தற்போது தேசிய தேர்வு முகமை பொங்கல் பண்டிகையின் போது முக்கிய தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
