2023 மார்ச் எட்டாம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஹோலி பண்டிகை என்பது வண்ணங்களின் பண்டிகை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இந்த பண்டிகையானது இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கான பண்டியாக மட்டும் பார்க்கப்படுகிறது. இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? என்ற காரணம் பலருக்கும் தெரிவதில்லை.

ஹோலி பண்டிகையானது ஸ்ரீ கிருஷ்ணருக்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. கிருஷ்ணர் தன்னுடைய பிரியமான தோழி ராதா மீது வண்ணக் பொடிகளை தூவி விளையாடினார். ஸ்ரீ கிருஷ்னரின் இந்த வழியை கடைப்பிடித்து தான் கோபியர்களும் வண்ணப்போடிகளை தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். காலப்போக்கில் இது கிருஷ்ணர் கொண்டாடிய வண்ணப் பொடிகளின் திருவிழாவாக மாறியது. இதனால் ஹோலி அன்று கிருஷ்ணரை வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும் என்பது நம்பிக்கை.

அசுர அரசனான ஹிரண்யகசபுவின் சகோதரிதான் ஹோலிகா. இவள் கடும் தவம் புரிந்து எப்படிப்பட்ட நெருப்பையும் தன்னை எதுவும் செய்யாத முடியாத வரத்தை பெற்றிருந்தாள். தீவிர விஷ்ணு பக்தனாக இருந்ததால் தன்னுடைய மகன் பிரகலாதனை கொலை செய்ய பலவிதங்களிலும் முயற்சி செய்து வந்தார் ஹிரண்யஹசபு. ஆனால் மகாவிஷ்ணுவினுடைய அருளால் பிரகலாதன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நெருப்பிலிருந்து மீண்டு வந்தான்.

அதே சமயம் தீய எண்ணத்தோடு இருந்த ஹோலிகா அவள் மூட்டிய நெருப்பிலேயே மாண்டாள். இந்த நாள் தான் ஹோலியாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் சிவபெருமானோடு தொடர்புடைய பண்டிகையாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது