ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் இரண்டாம் புதன்கிழமை அன்று உலக புகை பிடிக்காத தினமானது அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் மார்ச் பத்தாம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. பெயர் புகைபிடிக்கும் அபாயகரமான பழக்கத்தை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களுடைய முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. தீங்கு விளைவிக்கக்கூடிய பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களின் ஆபத்துக்கள், அதனுடைய ஆபத்தான விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.

அது மட்டும் இன்றி தீங்கு விளைவிக்கும் புகை பிடிக்கும் பழக்கம கொண்டவர்களை மீட்பதும் இந்த நாளினுடைய நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் அன்றாட வாழ்க்கையில் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவரை மட்டும் அது பாதிப்பை ஏற்படுத்தாமல் அவரை சுற்றியுள்ளவர்களுடைய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

புகைப்பிடிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய கூடும் என்றும், அதிகப்படியான புகைப்பிடித்தல் பிற கருவுறுதல் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு ஆண் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டால் அவருடைய விந்தணுக்களின் எண்ணிக்கை 3 முதல் 6 மாதங்களில் மேம்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்