சர்வதேச திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22 ஆம் தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. இது முதன் முதலாக 1998 ஆம் வருடம் அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டது. உலக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் திக்குவாய் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்கள்  எதிர்கொள்ளும்  பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் உள்ள திக்குவாய் சமூகங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்று கூடி சமூகத்தின் சில அம்சங்கள் திக்குவாய் நபர்களுக்கு எவ்வாறு கடினமாக இருக்கும்? எதிர்மறை அணுகுமுறைகளையும்,  பாகுபாடுகளையும் எதிர்கொள்ளல், திக்குவாய் உள்ளவர்கள், பதட்டமானவர்கள் அல்லது குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என்ற கட்டுக்கதைகளை நீக்கல் போன்றவற்றை முன்னிலைப்படுத்த பிரச்சாரங்களை நடத்துகின்றன. மேலும் அறிவியல், அரசியல், தத்துவம், கலை, திரைப்படம், இசை போன்ற துறைகளில் உலகில் கால் தடம் பதித்த அல்லது பதித்துக் கொண்டிருக்கும் பல குறிப்பிட்ட தக்க நபர்களையும் போற்றும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.