செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் சரி, நானும் சரி, நாங்கள் கேள்வி எழுப்புகின்ற பொழுது அமைச்சர் இடத்திலோ, முதலமைச்சர் இடத்திலோ பதில் வர வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் பெரும்பாலான கேள்விக்கு சபாநாயகரே பதில் சொல்லி விடுகிறார்.

அமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டிய வேலை இல்லாமல் போய்விடுகிறது. முதலமைச்சருக்கு அந்த வேலை இல்லாமல் போய்விடுகிறது.  அதனால் எந்த பிரயோஜனம் கிடையாது. அமைச்சருக்கு தான் முழு அதிகாரம் இருக்கின்றது. மக்களுடைய பிரச்சினையை எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும்  எங்களுடைய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கின்ற நாங்கள் எல்லாம், மக்களுடைய பிரச்சினையை…  அவையின்னுடைய கவனத்தில் கொண்டு வருகிறோம்.

அப்படி கொண்டு வருகின்ற பொழுது மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் குறுக்கிட்டு,  அதற்கு அவரே  பதில் சொல்லி முடித்து விடுகிறார். அமைச்சர் பதில் சொல்லுவதில்லை. அதனால் நாங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்ற முடியாமல் போய்விடுகிறது. மக்களுடைய பிரச்சனை தீர்வு காண முடியாமல் போகிறது. இது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. நான் பலமுறை சட்டப்பேரவை தலைவர்கிட்ட கோரிக்கை வைத்தேன்.

தாங்கள் நாங்கள் கேட்கின்ற கேள்விக்கு அமைச்சர் எங்களுக்கு பதில் சொல்வதற்காக.. அமைச்சரிடத்திலிருந்து பதில் எதிர்பார்த்து சொல்கிறோம். முதலமைச்சரிடத்திலிருந்து பதில் எதிர்பார்த்து சொல்கிறோம். ஆனால் இடைமறித்து நீங்களே அதற்கு விளக்கம் தெரிவித்து விட்டால் அமைச்சருக்கு என்ன வேலை இருக்கிறது ? என தெரிவித்தார்.