கிருஷ்ணகிரி அருகே பேரிகை பகுதியில் கிருஷ்ணன், ருக்மணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகேஸ்வர் மாலிக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மகேஸ்வர் மாலிக் என்ற குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தைக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது.

இதனால் அருகில் இருந்த பினாயில் பாட்டிலை எடுத்து தண்ணீர் என்று நினைத்து அந்த குழந்தை குடித்துள்ளார். அதன்பின்னர் அந்த குழந்தை மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து பதறிப்போன அவரது பெற்றோர் அந்தக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.