கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்” அரசு  எதை சொல்கிறதோ,  அதை இந்தியாவே பின்பற்றுகிறது என்பதுதான் இதுனுடைய சிறப்பு.

பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை இன்னொரு முறை மாற்றவே முடியாது….  யாராலும் மாற்றவே முடியாது….  காலம் காலத்திற்கும் பெண்கள் இந்த நாட்டில் இலவசமாக தான் பயணம் செய்யப் போகிறார்கள்,  அது எவராலும் மாற்ற முடியாது… ஆட்சி மாறும்,  கட்சி மாறும்,  எல்லாம் மாறும்… ஆனால் அது மாறவே மாறாது…..

அதனால்தான் 1967இல் அண்ணா அவர்கள் அவ்வளவு துணிவோடு சொன்னார். இந்த நாட்டில் நான் இரண்டு விஷயம் பண்ணுகிறேன்…..  அந்த இரண்டு விஷயத்தை என்னைக்காவது….  யாராவது மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போது…..  மனதிற்குள் ஒரு பயம் வரும் பாரு…. அந்த பயம் இருக்கும் வரை இந்த நாட்டை அண்ணாதுரை தான் ஆளுகிறான் என்று அர்த்தம்…..  அந்த மாதிரி இன்றைக்கு ஸ்டாலின் அவர்கள் செய்த ஒரு காரியத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலே மனதிற்குள் ஒரு பயம் வரும்….. அதுவரை இந்த மாநிலத்தை ஸ்டாலின் ஆளுகின்றார் என்று  தான் அர்த்தம் என தெரிவித்தார்.