ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.டி.சி பிரபாகரன், ஓய்வு பெற்ற என்னுடைய பேராசிரியர் ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்து கேட்டார். என்னப்பா….  எந்த பாதையிலே போய்க்கொண்டிருக்கிறது. தேறுமா? என்று கேட்டார். நான் சொன்னேன்..  தேர்தல் வந்தால் தேறும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவர் அண்ணன் ஓபிஎஸ் தலைமையை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களோடு இணைகிற போது நிச்சயமாக இது தேறும். தேர்தல் வந்தால் அது உங்களுக்கு புரியும் என்று நான் கூறினேன். காரணம் தொண்டர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் நம்மை ஏற்று கொண்டிருக்கிறார்கள்.

எப்போது காட்டும் என்று சொன்னால் ? தேர்தல் வருகிற போது தான் யாரு பக்கம் நிற்கின்றார் என்பதை நாடு பார்க்கப் போகிறது. அந்த வகையிலே நம்மையெல்லாம் B-டிம் என்று சொல்லுகிறார்கள். இந்த A-டிம், B-டிம்  எல்லாம் மறந்து விடுங்கள். உங்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன்…  எழுந்து நின்று  கர ஒளி எழுப்ப வேண்டும்.

இந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்ததிலிருந்து இன்று வரை….  479 கண்டன அறிக்கை கொடுத்திருக்கிற ஒரே ஒப்பற்ற எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தான்.  எழுந்து நின்று கரங்களை தட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.479 அறிக்கைகளை கொடுத்து,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அன்றாடம் DMKவை சாடுகின்ற இவரா B -டிம். திராவிட முன்னேற்றக் கழகத்தை தோலுரித்து காட்டுகிற வண்ணம் அன்றாடம் பேசுகிற போதும்… எழுதுகிற போதும்… அனைத்து தரப்பு மக்களின் உள்ள உணர்வுகளை பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற தலைவராக  அவர் இருக்கின்றார் என பேசினார்.